"
Home About Us Forms Memorandum News Register Member Donate Contact Us
7373750073

கறுப்புப்பணத்தை ஒழிப்போம்

ஒரு குடும்பத்தின் செலவிற்காக மாதம் ரூபாய் பத்தாயிரம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அக் குடும்பத்தின் மாத வருமானமும் பத்தாயிரம்தான், அப்படியானால் அக்குடும்பத்தில் சேமிக்க முடியுமா? முடியாது. அதே குடும்பத்தில் மாதவருமானம் 20 ஆயிரம் ரூபாய் வருமானால், பத்தாயிரம் ரூபாயை அக்குடும்பத்தால் சேமிக்க முடியும். அதே குடும்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தால், அக்குடும்பத் தில் பத்து லட்சம் வருமானம் வந்தால், அக்குடும்பத்தில் மாதம் ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்தால், அப்பணத்தை என்ன செய்வார்கள் சிந்திப்பீர்.

பணம் பெருக பெருக ஆடம்பர செலவுகளும் பெருகும். தங்கம் வாங்குபவர்களே திரும்பத் திரும்ப வாங்குவார்கள். இதே போன்றே பொருட்களும், வாங்கும் திறன் கூடுவதால் பொருட்கள் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். தங்கம் விலை ஏறுவதைப் போல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலை ஏற்றம் ஏற்படும். ஒரே குடும்பத்தில் மாதம் 10 கோடி வருமானம் வந்தால் பணத்தை என்ன செய்வார்கள், பணம் தேங்கத் தொடங்கும். சரியான கணக்கு காட்டி 30 சதவீதம் வரி கட்டுபவர்களுக்கே, அப்பணத்தை நேர்வழிகளில் முதலீடு செய்ய முடியும். மற்றவர்களிடம் கோடி கோடியாக கறுப்புப்பணம் தேங்கத் தொடங்கும். அப்பணத்தை இந்திய வங்கிகளில் போட்டு வைக்க முடியாது. எனவேதான் வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கிறார்கள்.

ஒரு நடிகர் 10 ஆண்டுகள் நடிப்புத்தொழிலில் இருந்தாலே அவர் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்க முடியும். அதே போலதான் விளையாட்டு வீரர்கள், அரசியலில் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மற்றும் நகைக்கடை, துணிக்கடை, தொழில் நிறுவனங்கள் போன்ற பெரிய பெரிய கடைகள் நடத்துபவர்களும் பணம் சேர்ப்பார்கள். எனவேதான் பத்து ஆண்டுகளுக்கு மேல் யாருக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுக்காதீர்.

பத்து ஆண்டுகளுக்குமேல் ஆதரவு கொடுக்காவிட்டால் அவர்களால் தொடர்ந்து சம்பாதிக்க முடியுமா, முடியாது. முடியாவிட்டால் சேர்த்து வைத்த பணத்தையே எடுத்து செலவுசெய்ய தொடங்குவார்கள். வெளிநாட்டு வங்கியில் போட்டாலும் திரும்ப எடுத்துதான் ஆகவேண்டும். கறுப்புப்பணம் தானாகவே வெளியே வந்துவிடும். அன்புள்ள இந்தியமக்கள் செல்வங்களே நாமே நம்முடைய நாட்டுப்பணத்தை கறுப்புப் பணமாக்க உதவலாமா! சிந்திப்பீர்! செயல்படுவீர். பத்து ஆண்டுகளுக்குமேல் பணம் சம்பாதிக்கும் எந்த நபருக்கும் தொடர்ந்து ஆதரவு தராதீர். 

 


 

Posted On : 2012-07-10 02:30:44
Viewed : 274,   0 mails has sent.

   Share on Google+     


Historical places in india North india tour - jammu and kashmir North india tour - Himachal-pradesh North india tour-uttranchal North india tour -punjab North india tour-haryana North india tour -delhi North india tour- Uttar pradesh North india tour-Rajasthan West india tour-Gujarat West india tour - madhya pradesh West india tour - Maharastra West india tour - Goa South india tour-Karnataka South india tour-Kerala South india tour-Andhra pradesh South india tour-Tamil nadu East india tour-Orissa East india tour - chandigarh East india tour - Jarkhand East india tour-west bengal East india tour -Sikkim East india tour - bihar East india tour-Meghalaya East india tour-Assam East india tour-Tripura East india tour-arunachal pradesh East india tour_Nagaland East india tour_Nagaland East india tour-Mizoram


General Secretry

IVP MEMBERS

  Videos  
More Videos ...
  தாத்தாக்களை புறக்கணிப்போம்
  பழையன களைவோம்
  அறுபதுகோடி
  தினம் ஒரு ரூபாய்
  பத்துஆண்டுகள்
  ஆறுமணி நேரம்
  இரண்டுமுறை மட்டும்
  கறுப்புப்பணத்தை ஒழிப்போம்
  காணிக்கை
  ஐம்பது சதவீதம் பெண்கள்
  கூட்டணியை முறியடிப்போம்
  லத்திகள் வேண்டாம்
  கட்டுவோம் வாருங்கள்
  மேலே பார்க்காதீர்
  விளம்பரம் தொல்லையா?
  மன்னராட்சி
  தங்கத்தை தவிர்ப்போம்
  15 வயதில் பட்டம்
  கல்வி கற்பிக்கும் முறை
  பெண்களே செயல்படுங்கள்
free counters
© Copyright indiansvictoryparty.com @ 2012 Designed By J2J Software Solutions