![]()
| ||
லத்திகள் வேண்டாம் மக்களின் கோரிக்கைகள் எல்லாம் எந்த அரசாலும் நிறைவேற்றப் படுவதில்லை. அழும் பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். அதேபோல் சில கோரிக்கைகளுக்கு போராடிதான் பெற்றுக் கொள்ளமுடியும். நம் மக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிறார்கள். போராட்டம் சில வேளைகளில் உணர்ச்சிப் பெருக்கால் கலவரமாக மாறிவிடுவதும் உண்டு. இது இயற்கையான ஒன்று. அவ்வேளைகளில் காவல் துறையினரால் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்பொழுது காவல்துறை தாங்கள் வைத்திருக்கும் லத்தி என்ற தடிகளால் அடித்து விரட்டுகின்றனர். அறவழிகளில் போராடுபவர்களுக்கும் தடி அடிபடுகிறது. இத்தடி அடிக்காயம் மிகவும் பலமாக உள்ளது. சிலருக்கு எலும்புகளும், சிலருக்கு மண்டையும் உடைந்து விடுகிறது. கோரிக்கைகளுக்காக போராடும் மக்களுக்கு எதிராக, அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போல் உள்ளது. இத்தடி அடி, மண்டை பிளந்து ரத்தம் கொட்டி யுத்தம் நடந்தது போல் காட்சி அளிக்கிறது. நம்முடைய மக்களை நாமே தேர்ந்தெடுத்த அரசு, நம்முடைய பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட காவல்துறையினரால் மிருகத்தனமாக தாக்கப்படுவது ஏற்புடையது அல்ல, கூடவே கூடாது. எனவே நம் இந்தியாவிலுள்ள காவல்துறை அனைத்திலும் லத்திகள் முழுவதும் நீக்கப்பட்டு, பள்ளிகளில் மாணவர்களை அடிக்க பயன்படுத்தும் பிரம்புகள் கொடுக்கப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவோம். காவல் துறையினர் அனைவருக்கும் லத்திகளுக்கு பதில் பிரம்பு கொடுக்கசெய்வோம். சிந்தனைகளை சிதறடிக்கும் சினிமாவை சிறியதாக்குவோம் Posted On : 2012-07-12 00:42:43
Viewed : 259, 0 mails has sent.
![]() ![]() ![]() ![]() ![]() General Secretry![]() IVP MEMBERS![]() ![]() ![]() ![]() |
"
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
© Copyright indiansvictoryparty.com @ 2012 | Designed By J2J Software Solutions |