![]()
| ||
மேலே பார்க்காதீர் நாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், மேலே பார்த்துக் கொண்டு நடந்தால் என்னவாகும், கல்தடுக்கி தள்ளாடுவோம், அல்லது பள்ளத்தில் போய் விழுவோம், அல்லது கால்களில் முட்கள் குத்தும், அல்லது வாகனங்களில் மோதுவோம், இன்னும் பல இடறல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாவோம். இதேபோல் தங்கள் வாழ்க்கையிலும் மேலே பார்ப்பவர்களுக்கு அதாவது நம்மைவிட வசதியானவர்களைப் பார்த்து அதேபோல வாழ ஆசைப்படுபவர்களுக்கு பல இன்னல்களும் துன்பங்களும் வந்து சேரும். வாழ்க்கையில் கீழேபார்த்து அதாவது நம்மைவிட வசதி குறைந்தவர்களை பார்த்து அவர்களை விட நாம் எவ்வளவோ மேலானவர்கள் என்று நினைத்து வாழப் பழகவேண்டும். நம்மிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது, அதைக்கொண்டு ஒரு ஆடை வாங்க கடைக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், ஐந்நூறு ரூபாய் விலை மதிப்புள்ள ஆடையை வாங்கத்தான் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் 600 அல்லது 700 ரூபாய்க்குள் தேர்வுசெய்து விடலாம். கொஞ்சம் ரூபாய் மீதியாகவும் வைத்திருக்க முடியும். ஆயிரம் ரூபாய்க்கு ஆடைதேட நினைத்தால் 1500 ரூபாய் வரை ஆகலாம், அப்பொழுது பணம் பற்றாக்குறை ஏற்பட்டு விடும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவை இல்லாமல் கடன்சுமை வந்துவிடும். இவ்வாறு ஒவ்வொரு பொருளுக்கும் கடன்வாங்க நேரிடும். இதனால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை நாமே தேடிக் கொள்கிறோம். திருமணசெலவு செய்ய திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஐந்து லட்சம் ரூபாய் வைத்திருந்தால் அதில்பாதி அதாவது இரண்டரை இலட்சம் செலவு செய்யத்தான் திட்டமிட வேண்டும். அப்பொழுதுதான் மூன்று அல்லது மூன்றரை இலட்சத்தில் செலவுகளை முடிக்க முடியும். இதேபோலத்தான் வீடுகட்ட பத்து இலட்சம் கையில் இருந்தால் அதில் பாதி அதாவது 5 இலட்சத்தில் கட்டத்தான் திட்டம் போடவேண்டும். அப்பொழுதுதான் ஏழு அல்லது ஏழரை இலட்சத்தில் வீடுகட்டி முடிக்கமுடியும். வீட்டுவேலையும் பாதியில் நிற்காது. கடன் வாங்க பலரிடம் கையேந்த வேண்டிய அவசியமும் இருக்காது. நாம் அன்றாடம் செலவுசெய்ய நினைக்கும் ஒவ்வொன்றிலும் இவ்வாறு திட்டமிட்டு செலவு செய்தால், கடன்காரன் ஆகவேண்டிய தேவையும் இருக்காது. கடன் சுமையினால் வட்டி கட்டுதல் மற்றும் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். நாம் ஒவ்வொருவரும் நமக்கு கீழ் நிலையிலுள்ள மக்களைப் பார்க்காமல் நம்முடைய தகுதிக்கு மேலான மக்களைப் பார்த்து அதேபோல, அதாவது கீழே பார்க்காமல் மேலே பார்த்து வாழ நினைப்பதால் தான் நம் வாழ்க்கையில் பலவித கஷ்டங்களும் பாடுகளும் அனுபவிக்க நேரிடுகிறது. பூனை யானையைப்போல சாப்பிட நினைக்கலாமா? எலி புலியைப்போல் மானை வேட்டையாட நினைக்கலாமா? ஐந்துவயது சிறுவன் தந்தையாக நினைக்கலாமா? ஒன்றும் படிக்காதவன் கலெக்டராக நினைக்கலாமா? வாயிற் காவலாளி அரசனைப்போல் ஆடம்பரமாக வாழ நினைக்கலாமா? சிங்கம் பறக்க ஆசைப்படலாமா? மூன்றாயிரம் வருமானம் உள்ளவன் முப்பதாயிரம் வருமானம் உள்ளவன் போல் வாழ ஆசைப்படலாமா? சிந்திப்பீர்! செயல்படுவீர்! வருமானத்துக்கு தகுந்தபடி எளிமையாக வாழ பழகுங்கள். Posted On : 2012-07-12 01:52:21
Viewed : 300, 0 mails has sent.
![]() ![]() ![]() ![]() ![]() General Secretry![]() IVP MEMBERS![]() ![]() ![]() ![]() |
"
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
© Copyright indiansvictoryparty.com @ 2012 | Designed By J2J Software Solutions |