![]()
| ||
இரண்டுமுறை மட்டும் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் அதிகமாக போடப்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகளில் படிக்கின்றோம். யாருடைய பணம் கூடுதலாக போடப்பட்டிருக்கும் என்றால் நிச்சயமாக அது அரசியல்வாதிகள் பணமாகத்தான் இருக்கக்கூடும். அவர்களுக்குத்தான் பணம் எப்படி வந்தது என்று கணக்கு காட்டவும் முடியாது. வரி கட்டவும் முடியாது. அரசியல்வாதிகளிடம் மட்டும் ஏன் இப்படி அதிகப்படியான பணம்வருகிறது தெரியுமா, அரசியலில் மட்டும்தான் எவ்வித கல்வித்தகுதியும் இல்லை. வயது வரம்பும் இல்லை. ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகலாம், எம்.பி ஆகலாம், அமைச்சர் ஆகலாம், முதல்அமைச்சர் ஆகலாம், பிரதமமந்திரி ஆகலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று கஷ்ட்டப்பட்டு படித்தவர்களை கூட தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டும்தான் உண்டு. எனவே பணப்புழக்கமும் அதிகம். ஒருவர் ஒருமுறை அதாவது ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ அல்லது எம்.பி. ஆனாலே தங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரம் அனைத்தையும் சம்பாதித்து விடுகிறார்கள். தொடர்ந்து பலமுறை எம்.எல்.ஏ, எம்.பி ஆகுபவர்களிடம் பணம் தேவைக்கு அதிகம் புரளும். அமைச்சர்களுக்கு என்றால் பணப்புழக்கம் சொல்லவாவேண்டும். இப்பணத்தையெல்லாம் மறைத்து வைப்பதற்காகத்தான் சுவிஸ் வங்கியில் போட்டு வைக்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், டைரக்டர்கள், பெரும் தொழில் செய்யும் நகைக்கடை, துணிக்கடை, போன்ற பல தொழிலதிபர்கள் இன்னும் பலர் இவர்களுக்கு பொதுமக்களாகிய நாம் பத்து ஆண்டுகள் மட்டும் ஆதரவு கொடுத்து விட்டு பின்னர் ஆதரிக்காவிட்டால், பின் நாட்களில் செலவிற்காக இவர்கள் என்ன செய்வார்கள், சுவிஸ் வங்கியில் போட்டாலும் திரும்ப எடுத்துதான் ஆகவேண்டும். இந்நிலை தொடர்ந்தால் வெளிநாடுகளில் அளவுக்கதிகமான பணத்தை சேமித்து வைக்க முடியுமா. இளைஞர்களே சிந்திப்பீர். ஒரு எம்.எல்.ஏ.வுக்கு இரண்டுமுறை மட்டும் ஓட்டுபோடுவோம். பின்னர் அவர் எத்தனை முறை போட்டியிட்டாலும் தோற்கச் செய்வோம். இதே போல எம்.பி, அமைச்சர், முதல்அமைச்சர், பிரதம மந்திரிவரை இரண்டுமுறை மட்டும் வாக்களித்து ஆதரிப்போம். இரண்டு முறைக்கு மேல் ஆதரவை விலக்கி கொள்வோம். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவு கொடுப்போம். தள்ளாடும் வயதிலும் பதவிசுகம் மட்டும் வேண்டும் என்று ஏங்கிநிற்கும் தாத்தாக்களை தள்ளுவோம். அரசியல்வாதி மட்டும் அல்லாது நடிகர், நடிகைகளையும் பத்து ஆண்டுகள் மட்டும் படம் பார்த்து ஆதரவு கொடுப்போம். பின்னர் ஒதுக்கி விடுவோம். இதேபோல் பெரிய நகைக்கடைகள், துணிக்கடைகள் இன்னும் நாட்டில் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்கும் அனைவரையும் புறக்கணிப்போம். புதியவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். அதாவது புதிதாக வரும் இளைஞர்களுக்கு ஆதரவு கொடுப்போம். நம் நாட்டின் செல்வம் அனைவருக்கும் பகிர்ந்து கிடைக்க வழி செய்வோம். சிந்திப்போம், செயல்படுவோம். Posted On : 2012-07-10 01:38:04
Viewed : 313, 0 mails has sent.
![]() ![]() ![]() ![]() ![]() General Secretry![]() IVP MEMBERS![]() ![]() ![]() ![]() |
"
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
© Copyright indiansvictoryparty.com @ 2012 | Designed By J2J Software Solutions |