![]()
| ||
கல்வி கற்பிக்கும் முறை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சுமார் 19 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இக்கல்வியானது மாணவர்களின் வருங்கால வாழ்க்கைக்கோ, வேலையில் சேருவதற்கோ உதவுவதில்லை. கல்வி வேறு வாழ்க்கை வேறாக இருக்கிறது. இதனால் அனேகர் வாழ்க்கையில் சரியான முன்னேற்றத்தை காண முடிவதில்லை. கல்விக் கூடங்களை தொழில் கூடங்களாக மாற்றவேண்டும். ஒரு மாணவன் அல்லது மாணவி கல்விக்கூடங்களை விட்டு வெளியே வரும்போது குறைந்தது 2 தொழில்களை செயல்முறையில் கற்று தேர்ந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரை பற்றி கற்றவன் தானாகவே அந்த கம்ப்யூட்டரை ஒவ்வொன்றாக முழுவதும் பிரித்துவிட்டு மறுபடியும் ஒன்று சேர்ந்து அதை மீண்டும் இயங்கச் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கல்வி வெறும் புத்தகக் கல்வியாக மட்டும் இருந்து விடக்கூடாது. மேலும் நாட்டு நடப்பு, அரசியல், நீதிமன்ற நடைமுறைகள், சட்டங்கள், குற்றமும் தண்டனையும், வார்டு உறுப்பினர் முதல் பிரதமர் வரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, அவருடைய அதிகாரங்கள் என்னென்ன, விவசாயம் செய்வது எப்படி, சமையல் செய்வது எப்படி, சாப்பாட்டிற்கு தேவை என்னென்ன, நோய்களும் மருந்துகளும், போதை பழக்கத்தினால் வரும் தீமைகள், இன்னும் மனித வாழ்க்கைக்கு அன்றாடம் தேவையான அனைத்தையும் கல்வி கூடங்களில் பயிற்றுவிக்க வேண்டும். மேலும் நவீன கால பாடத்திட்டங்களை தெரிந்திராத பழைய கால ஆசிரியர்களை நீக்கி விட்டு, இன்றைய பாடத்திட்டங்களை நன்கு கற்று தேர்ந்த இளம் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். . சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே வருங்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞர்களை உருவாக்க முடியும். எனவே கல்வி கற்று முடித்த உடன் நேரடி வேலைக்கு செல்லக்கூடிய அனுபவக் கல்வி கற்றுதர அனைவரும் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம், வாருங்கள்! சில்லரைகளை சிக்கலாக்கும் சினிமாவை சிந்துவோம். Posted On : 2012-07-13 02:58:09
Viewed : 644, 0 mails has sent.
![]() ![]() ![]() ![]() ![]() General Secretry![]() IVP MEMBERS![]() ![]() ![]() ![]() |
"
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
© Copyright indiansvictoryparty.com @ 2012 | Designed By J2J Software Solutions |